மயானங்களுக்குரிய எல்லைகள் இன்மையால் சீரமைப்புத் தாமதம்

வவுனியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பல மயானங்களின் எல்லைகள் தெளிவாக இல்லாமையால் சீரமைப்புப் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வவுனியா தெற்கு பிரதேச செயலர் திருமதி சுகந்தி கிசோர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மயானங்களின் சீரமைப்புத் தொடர்பில் வவுனியா பிரதேச செயலக அபிருத்திக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 67 மயானங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல மயானங்களின் எல்லைகள் தெளிவாக இல்லை. இந்த நிலையில் எல்லை தெளிவு படுத்தப்பட்டுள்ள மயானங்களை நாம் கட்டம் கட்டமாக சீரமைத்து வருகின்றோம்.

இதுதவிர, சில மயானங்களுக்குரிய பாதைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பாதைகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் தறபோது இடம்பெறுகின்றன என்றார்.

You might also like