சண்டிலிப்பாயில் 197 பயனாளிகளுக்கு மாதிரி வீட்டுத்திட்டம்!!

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடக 197 பயனாளிகளுக்கான மாதிரி வீட்டுத்திட்டத்துக்கான முன்மொழிவு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாதிரிக் கிராம திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக 98.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை,உயரப்புலம்,மானிப்பாய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியே இந்த மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

You might also like