சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீக்கப்படலாம்!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை இன்று நீக்கப்படலாம் என்று தொடர்பாடல் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைத்தொடர்பு ஆணைக்குழு இன்று இந்த விடயம் தொடர்பில் கூடி ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.

வெறுக்கத்தக்க, இனவாதப் பதிவுகளை நீக்குவது தொடர்பில் தொலைத்தொடர்ப்பு ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சு நடத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களும், கருத்தாடல் செயலிகளும் அரசால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டன. வதந்திகளும், பொய் செய்திகளும் பரவாது தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள், கருத்தாடல் செயலிகளுக்கான தடை இதுவரை நீக்கப்படவில்லை.

You might also like