சாவகச்சேரி வணி­கர் மன்­றத்­துக்கு புல­மைப் பரி­சில் நிதி­யம் !!

சாவ­கச்­சேரி கைத்­தொ­ழில் வணி­கர் மன்­றத்­துக்கு மேலும் ஒரு புல­மைப் பரி­சில் நிதி­யம்கைய­ளிக்­கப்­பட்­டது. ‘‘தேர்ச் சிற்­பக் கலை­ஞர் மட்­டு­வி­லூர் சிற்­பக் க­லைக்­கு­ரி­சில் கலா­மோ­கன் புல­மைப் பரி­சில் நிதி­யம்’’ என்­னும் பெய­ரில் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரால் வணி­கர் மன்ற நிர்­வா­கத்­தி­ன­ரி­டம் அது கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்த நிதி ஜி.சி.ஈ உயர்­த­ரப் பரீட்­சை­யில் சித்­தி­பெற்று கலைத்­து­றை­யில் சித்­திர பாடத்­தில் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறும் ஒரு மாண­வ­ருக்கு வரு­டாந்­தம் வழங்­க­வேண்­டு­மெ­னக் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டது.

தென்­ம­ராட்­சிக் கல்வி வல­யப் பாட­சா­லை­க­ளில் கற்­கும் பொரு­ளா­தார நிலை­யில் பின்­தங்­கிய குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் கல்வி மேம்­பாடு, மற்றும் கைம்­பெண்­கள் மாற்­றுத் திற­னா­ளி­கள் என்­போ­ருக்கு வழங்­க­வென வணி­கர் மன்ற அங்­கத்­த­வர்­க­ளால் வைப்­பி­லி­டப்­பட்டு மன்­றத்­தி­டம் கைய­ளிக்­கப்­பட்ட நிதி­யத்­தி­லி ­ருந்து வரு­டாந்­தம் நூற்­றுக்கு மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு புல­மைப் பரி­சில் நிதி­யாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

மன்­றத்­தால் மாண­வர்­க­ளின் கல்வி மேம்­பாட்டு தொடர்­பாக மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கைக்கு தாமும் பங்­க­ளிப்பு வழங்க வேண்­டு­மென்று பரோ­ப­கா­ரி­க­ளால் பத்­துக்கு மேற்­பட்ட நிதி­யங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அத்து­டன் மன்ற அங்­கத்­த­வர்­க­ளின் மாதாந்­தப் பங்­க­ளிப்­பின் மூலம் மாண­வர்­க­ளுக்கு மன்­றத்­தால் மாதாந்­தம் கல்வி நிதி வழங்­கப்­பட்டு வரு­கின்­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like