மாவி­லைத் தத்தி நோயால் மா மரங்­க­ளுக்கு பாதிப்பு!!

மாம­ரங்­க­ளில் ஏற்­பட்­டுள்ள மாவி­லைத் தத்தி நோயால் பூக்­கள் கருகி பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போ­தைய கடு­மை­யான வறட்சி, வெப்­பம், பனி போன்­ற­வற்­றால் மாம­ரங்­க­ளில் பூத்த பூக்­க­ளில் மாவி­லைத் தத்தி என்ற நோய்த் தாக்­கம் எற்­பட்­டுள்­ளது. நோய்த் தாக்­கத்­தால் பூக்­க­ளின் இன விருத்தி பாதிக்­கப்­ப­டு­வ­தோடு காய்க்­கும் தன்­மை­யும் இழக்­கப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள மாம­ரங்­க­ளில் பர­வ­லாக இந்த முறை இந்த நோய்த் தாக்­கம் ஏற்­பட்­டுள்­ள­து என்று மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. அதி­க­மான மாம­ரங்­க­ளில் பூக்­கள் மலர்ந்துள்ள போதும் அவை கருகி பாதிக்­கப்­பட்­டும் காணப்­ப­டு­கின்­றன. இந்த நோய்த் தாக்­கத்தை சிலர் பூகை ஊட்­டி­யும் கட்­டுப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

புகை ஊட்­டு­வ­தன் மூலம் இந்த மாவிலை தத்­தி­களை இவ்­வாறு ஒளிக்க முடி­யும் என்று மாகாண பிரதி விவ­சா­யப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தார். கொடி­கா­மம், மீசாலை, வெள்­ளம்போக்­கட்டி, கச்­சாய், அல்­லாரை போன்ற பகு­தி­க­ளில் மாம­ரங்­கள் பாதிக்­கப்­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றன.

மாம­ரங்­கள் அனைத்­தும் பூத்­துக் குலுங்­கி­ காய்­கள் உரு­வா­கத் தயா­ராக இருந்த நிலை­யில் திடீ­ரென பூக்­கள் அனைத்­தும் கருகி குருத்­துக்­க­ளு­டன் முற்­றாக உதிர்ந்து விழு­கின்­ற­மையைக் காண­மு­டி­கின்­றது. மாமர இலை­கள், பூக்­கள், குருத்­து­கள் முற்­றாக கறுப்பு நிற­மாக மாறி நிலத்தில் கொட்­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்­பாக மக்­கள் தெரி­விக்­கை­யில் ‘முன்­னைய காலங்­க­ளில் இவ்­வாறு மாம­ரங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­துண்டு. இருப்­பி­னும் இந்த வ­ரு­டம் அதி­க­மான பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. மழை, வெப்­பம், பனி மூன்­றும் மாறி மாறி வரு­வதே பாதிப்­புக்­குக் கார­ணம் – என்ற­னர்.

You might also like