தமிழ் மாருதம் விழா!!

வவுனியா தமிழ் மாமன்றத்தின் முத்தமிழ் சங்கமமான தமிழ் மாருதம் விழா வவு னியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கண்டி வீதியிலுள்ள விபுலானந்தர் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் இடம் பெற்றது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. நேற்று முன்தினம், நேற்று என்று இரு நாள்கள் விழா இடம்பெற்றது.

முதல்நாள் நிகழ்வுகள் சி.கிருபானந்த குமாரின் தலைமையில் இடம்பெற்றன. அன்றைய நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன் தமிழ் மாமன்றத்தின் வருடாந்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நேற்றைய நிகழ்வு கு.அனுஜன் தலைமையில் நடைபெற்றது. வாத்திய பிருந்தா, கூத்து, விவாத அரங்கு, நாடகம், கவியரங்கம், நாட்டிய நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட புத்தக நிலையங்கள் பதிப்பகங்களின் ஒன்றிணைவில் மாபெரும் புத்தக கண்காட்சியும் புத்தக மலிவு விற்பனையும் ஓவியக் கண்காட்சியும் இருநாள்களும் இடம்பெற்றிருந்தன.

You might also like