தேர்தலின் பின் பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்கு தடை!!

கடந்த தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரங்களில் இருக்க கூடியமுரண்பாடு காரணமாக பிரதேச அபிவிருத்தியை தீர்க்கக் கூடியதான வழிவகைகளை பெறுவதில் மக்கள் பிரநிதிகளுக்கும், திணைக்கள தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

இன்று வன்னி மாவட்டங்கள் மூன்றிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டியது கட்டயமானது. அப்பொழுதுதான் மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும்.

வவுனியாவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட செயலகமாக வவுனியா பிரதேச செயலகம் காணப்படுகிறது. சனத்தொகை அதிகம் என்பதால் தேவைகளும் அதிகமாகவே இருக்கின்றன. மீள்குடியேற்றம் , வீதிப் பிரச்சனைகள், போக்குவரத்து வசதிகள், பல அடிப்படை தேவைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையான அபிவிருத்தியைச் செய்வதற்கு மத்தியிலே நிலையான ஒரு ஆட்சி இருக்க வேண்டும். ஆனால் தற்சமயம் ஒரு ஸ்திரமற்ற ஆட்சி காணப்படுகிறது இனரீதியாக மத ரீதியாக ஒரு கொந்தளிப்பான நிலைமையும், அதனைவிட போருக்கு பின் எமக்கு பல தேவைகள் உள்ளன.- என்றார்.

You might also like