கண்­டா­வளை கலா­சார விழா!!

கிளி­நொச்சி கண்­டா­வ­ளைப் பிர­தே­சத்­தின் கலா­சார விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிறப்­பாக இடம்­பெற்­றது.

வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத்­தின் அனு­ச­ர­ணை­யில் கண்­டா­வளை கலா­சா­ரப் பேர­வை­யால் நடத்­தப்­பட்ட இந்த வரு­டாந்­தக் கலா­சார விழா கண்­ண­கி­ந­கர் ஆலய மண்­ட­பத்­தில் பிர­தேச செய­லர் கோ. நாகேஸ்­வ­ரன் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் காத்­த­வ­ரா­யன் கூத்து, கர்­நா­டக சங்­கீ­தம், நட­னம் மற்­றும் பாரம்­ப­ரிய கலை நிகழ்­வு­கள் என்­பன இடம்­பெற்­ற­தோடு, உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளின் ஆக்­கங்­க­ளைக் கொண்­ட­மைந்த ”வலை ஓசை” நூலும் வெளி­யிட்டு வைக்கப்­பட்­டது. அத்­தோடு, தெரிவு செய்­யப்­பட்ட சிறந்த கலை­ஞர்­க­ளுக்கு விரு­து­க­ளும் வழங்கி வைக்­கப்­பட்­டன.

You might also like