புலம்பெயர் உறவுகளால் 567 குடும்பங்களுக்கு உதவி!!

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் ரவி­க­ர­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் வாழ்­வோம் வளம்­பெ­று­வோம் செயற்­றிட்­டத்­தின் ஊடாக இது­வரை 567 குடும்­பங்­கள் பயனடைந்துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

புலம்­பெ­யர் உற­வு­க­ளின் பங்­க­ளிப்­பில் முன்­னெ­ டுக்­கப்­பட்ட பதி­னைந்­தாம் கட்ட செயற்­றிட்­டத்­தில் முப்­பது குடும்­பங்­கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

குறுங்­கால வாழ்­வு­டைமை ஊக்­கு­விப்பை நோக்­கா­கக் கொண்டு நாளாந்த உண­வுத்­தே­வைக்கு இடர்­ப­டும் குடும்­பங்­க­ளுக்­கான ஒத்­துழைப்­பாக வாழ்­வோம் வளம் பெறு­வோம் என்ற செயற்­றிட்­ட­மா­னது வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் துரை­ராசா ரவி­க­ர­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

புலம்­பெ­யர்ந்து வாழும் உற­வு­க­ளின் பணப்­பங்­க­ளிப்­பில் இந்­தச் செயற்­றிட்­டம் நடை­பெ­று­கி­றது. பதி­னைந்­தாம் கட்­டத்­து­டன் இது­வ­ரை­யில் 567 குடும்­பங்­கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தக் கட்­டத்துக்காகப் புலம்­பெ­யர்ந்து பிரிட்டனில் வாழும் சுபாஸ்­க ­ர­னின் குடும்­ப­ மும், புலம்­பெ­யர்ந்து கன­டா­வில் வாழும் செக­தீசு குடும்­ப ­மும், முப்­பத்து ஆறா­யி­ரம் ரூபா பெறு­ம­தி­யான உத­வி­களை வழங்­கி­யுள்­ள­ன.

You might also like