மட்டக்களப்பில் சுழல் காற்று!!

மட்டக்களப்பில் நேற்று இரவு வீசிய பலத்த சுழல் காற்றினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் களஞ்சிய அறையின் கூரை முற்றாகச் சேதடைந்தது என்று போரதீவுப் பற்றுப் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இங்கு பலத்த மழையுடன் கூடிய காற்று வீசியது. இதனால் பல இடங்ககளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. பாதிப்பின் நிலமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

You might also like