ஓய்­வூ­தி­யர்­க­ளுக்­கும் வாழ்க்­கைப்­படி அதிகரிக்கக் கோரிக்கை!!

அரச ஊழி­யர்­க­ளுக்கு மாதாந்த சம்­ப­ளத்­து­டன் வாழ்க்­கைப்­படி கொடுப்­ப­து­போல ஓய்­வூ­தி­யம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யப் பணத்­து­டன் வாழ்க்­கைப்­படி கொடுக்க வேண்­டும் என்று பகி­ரங்க சேவை­கள் ஓய்­வூ­தி­யர் நம்­பிக்கை நிதி­யக் கூட்­டத்­தில் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது.

பகி­ரங்க சேவை­கள் ஓய்­வூ­தி­யர் நம்­பிக்கை நிதி­யம் யாழ்ப்­பா­ணப் பிர­தேச பிரி­வுச் சங்­கத்­தின் வரு­டாந்­தப் பொதுக்­கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்பாண பிர­தேச செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெற்­றது.

2006க்குப் பிறகு ஓய்­வூ­தி­யம் பெறு­ப­வர்­க­ளுக்­கும் தற்­போது ஓய்­வூ­தி­யம் பெறு­ப­வர்­க­ளுக்­கும் இடையே நிறைய முரண்­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன அவற்­றுக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்.

சிறப்பு மர­ண­ப­ணிக்­கொடை 12ஆயி­ரத்து 500 ரூபா­வு­டன் மேல­தி­க­மாக 7ஆயி­ரம் ரூபா வழங்க வேண்­டும். வயது எல்லை அடிப்­ப­டை­யில் தீர்­மா­னித் த­படி 3ஆயிரம் 500- – 7ஆயி ரம் ரூபா வரை வழங்க வேண்­டும். ஓய்­வூ­தி­யம் பெறு­ப­வர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஒரு நாளுக்கு 500 ரூபா படி பத்து நாள்­க­ளுக்கு 5ஆயி­ரம் ரூபா வழங்கப் படுகின் றது.

ஆனால் அவர் மருத்­து­வ­ம­னை­யில் திடீ­ரென இறந்து போனால் அவர்­க­ளுக்­கு­ரிய கொடுப்­ப­னவு வழங்கப் படுவ தில்லை. அவர்­க­ளுக்­கு­ரிய கொடுப்­ப­னவை அவ­ரின் பின்­னு­ ரித்து உடை­ய­வர்­க­ளுக்கு வழங்க வேண்­டும். வங்­கி­யில் வழங்­கு­கின்ற கடன்­க­ளுக்­கு­ரிய வட்டி வீதத்தைக் குறைக்க வேண்­டும் என்று கூட்டத்தில் கோரிக்கைக் முன்வைக் கப்பட்டது.

You might also like