சமூக வலைத்தளங்களின் முடக்கம் இலங்கை பொருளாதாரத்துக்கு அடி

சமூக வலைத்­த­ளங்­கள் பாவ­னை­மீது அரசு விதித்­துள்ள தற்­கா­லி­கத் தடை இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரத்­தில் தாக்­கல் செலுத்­தி­யுள்­ள­து­டன், பொரு­ளா­தார சரி­வுக்கு வழி­வ­குத்­துள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கண்டி நிர்­வா­கப் பிரி­வுக்­குட்­பட்ட பிர­தே­சங்­க­ ளில் கடந்த வாரம் ஏற்­பட்­டி­ருந்த இன­வாத வன்­மு­றை­கள் கார­ண­மாக இலங்கை முழு­வ­தும் சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட் டுள்­ளது. கடந்த புதன்­கி­ ழமை முதல் அவ­ச­ர­கால நிலை­யும் நாடு முழு­வ­தும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­கால நிலை நீக்­கப்­ப­ டும்­வரை சமூக வலைத்­த­ளங்­கள் பாவ­னைக்கு எதி­ராக அரசு விதித்­துள்ள தடை தொட­ரு­மென்று அர­சின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கி­றது.

இந்த நி­லை­யில், சமூக வலைத்­த­ளங்­க­ளான முக­நூல் உள்­ளிட்­ட­வற்றை பயன்­ப­டுத்தி சாதா­ரண அள­வி­லான வர்த்­த­கத் தொடர்­பா­டல்­கள் இடம்­பெற்­று­வந்­துள்­ளன. குறிப்­பாக, இலங்கை, இந்­தியா, இலங்கை, மத்­திய கிழக்கு மற்­றும் உல­கின் பல்­வேறு நாடு­க­ளு­டன் வர்த்­த­கர்­கள் தொடர்­பு­க­ளைப் பேணி­வந்­துள்­ள­னர்.

கடந்த ஐந்து நாள்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­க­ளில் தக­வல்­க­ளைப் பரி­மா­றிக்­கொள்ள முடி­யாது போயுள்­ள­மை­யால் இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரத்­தில் இந்த விட­யம் தாக்­கத்­தைச் செலுத்­தி­யுள்­ளது.

சில ஏற்­று­மதி, இறக்­கு­ம­தி­க­ளும் தொடர்­பா­டல் இன்­மை­யால் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. பல மில்­லி­யன் ரூபா வரை­யில் இழப்பு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டு­மென தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அரச தரப்­பி­லி­ருந்து இது­வரை இது குறித்து தக­வல்­கள் எது­வும் வெளி­யா­க­வில்லை.

You might also like