சிறு­மியை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு கடூழியச் சிறை!!

15 ஆண்டுகள்
கடூழியச் சிறை

16 வய­துக்­குட்­பட்ட சிறு­மி­யைக் கடத்தி வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­திய இளை­ஞ­னுக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்­தது யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்று.

குற்­ற­வா­ளிக்கு உத­விய குற்­றச்­சாட்­டில் அவ­ரது நண்­ப­ருக்கு 5 ஆண்­டு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டது.

2014ஆம் ஆண்டு வட­ம­ராட்சி, வல்­வெட்­டித்­து­றை­யில் 13 வய­துச் சிறுமி ஒரு­வர் கடத்­திச் செல்­லப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் 22 வய­து­டைய (குற்­றம் நடந்­த­போது) இளை­ஞர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ரா­கப் பருத்­தித்­துறை நீத­வான் மன்­றில் சுருக்­க­மு­றை­யந்ந விசா­ர­ணை­கள் நடந்­தன. சந்­தே­க­ந­பர்­கள் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். வழக்­குக் கோவை­கள் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் பாரப்­ப­டுத்­தப்­பட்­டன.

முத­லா­வது சந்­தே­க­ந­பர் மீது கடத்­தல் மற்­றும் வன்­பு­ணர்­வுக் குற்­றச்­சாட்­டும், இரண்­டா­வது சந்­தே­க­ந­பர் மீது கடத்­தல் குற்­றச்­சாட்­டும் முன்­வைக்­கப்­பட்டு சட்­டமா அதி­ப­ரால் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­கள் யாழ். மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் நடை­பெற்­று­வந்­தன. நேற்று வழக்­குத் தீர்ப்­புக்­காக எடுக்­கப்­பட்­டது.

“சந்­தே­க­ந­பர்­கள் இரு­வ­ரும் குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர். தமது குற்­றத்­துக்­காக தற்­போது அவர்­கள் மனம் வருந்­து­கின்­ற­னர். அவர்­கள் இரு­வ­ரின் குடும்ப நிலை­யைக் கருத்­தில்­கொண்டு குறைந்­த­பட்ச தண்­ட­னையை வழங்க வேண்­டும் என்று கோரு­கின்­றேன்.”- என்று எதி­ரி­கள் தரப்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கருணை விண்­ணப்­பம் செய்­தார்.

“எதி­ரி­கள் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­தால் அவர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்­டும். பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு இழப்­பீடு பெற்­றுக்­கொ­டுக்க மன்று உத்­த­ர­விட வேண்­டும்.”- எனறு அரச சட்­ட­வாதி சுகாந்தி கந்­த­சாமி மன்­றில் விண்­ணப்­பம் செய்­தார்.

மேல் நீதி­பதி தீர்ப்பை அறி­வித்­தார். குற்­ற­வா­ளி­கள் இரு­வ­ரும் குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர். முத­லா­வது எதிரி சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­துள்­ளார். இரு குற்­றங்­க­ளுக்­கா­க­வும் எதி­ரிக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கின்­றது.

முத­லா­வது எதிரி பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 5 லட்­சம் ரூபா இழப்­பீடு வழங்க வேண்­டும். வழங்­கத் தவ­றின் 2 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டும். தண்­ட­மாக 5 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும். செலுத்­தத் தவ­றின் ஒரு மாதச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டும்.

இரண்­டா­வது எதிரி சிறு­மி­யைக் கடத்­திச் செல்ல முத­லா­வது எதி­ரிக்­குத் துணை நின்­றுள்­ளார். அதற்கு அவ­ருக்கு 2 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­றது. அந்­தத் தண்­டனை 5 ஆண்­டு­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­ப­டு­கின்­றது. 5 ஆயி­ரம் ரூபா தண்­டம் செலுத்த வேண்­டும். செலுத்­தத் தவ­றின் ஒரு மாதச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டும்- என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தீர்ப்பு வழங்­கி­னார்.

10 ஆண்டுகள்
கடூழியச் சிறை

யாழ்ப்­பா­ணத்­தில் 16 வய­துக்­குட்­பட்ட சிறுமி ஒரு­வரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் குற்­ற­வா­ளி­யா­கக் காணப்­பட்­ட­வ­ருக்கு 10 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்­தது யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்று.

யாழ்ப்­பா­ணம், கொட்­ட­டி­யைச் சேர்ந்த சிறுமி ஒரு­வர் 2013ஆம் ஆண்டு நவம்­பர் முத­லாம் திக­திக்­கும், 2014ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் முத­லாம் திக­திக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 3 தட­வை­கள் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார் என்று யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ருக்கு எதி­ரான சுருக்க முறை­யற்ற விசா­ரணை யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் நடை­பெற்­றது. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார். வழக்­கே­டு­கள் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் பாரப்­ப­டுத்­தப்­பட்­டன.

சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக 3 குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்டு சட்­டமா அதி­ப­ரால் யாழ்­ப­பா­ணம் மேல் நீதி­மன்­றில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் வழக்கு விசா­ர­ணை­கள் நடை­பெற்று வந்­தன. நேற்று வழக்கு தீர்ப்­புக்­காக எடுக்­கப்­பட்­டது.

தீர்ப்பை மேல் நீதி­மன்ற நீதி­பதி அறி­வித்­தார். எதிரி குற்­றச்­சாட்­டுக்­க­ளைத் தாமாக முன்­வந்து ஏற்­றுள்­ளார். 3 குற்­றங்­க­ளுக்­கும் எதி­ரிக்கு 10 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 2 லட்­சம் ரூபா நட்­ட­ ஈடு செலுத்த வேண்­டும். செலுத்­தத் தவ­றின் 3 மாதச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டும் என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தண்­ட­னைத் தீர்ப்பு வழங்­கி­னார்.

You might also like