ராணு­வத்­துக்கு காணி வழங்க கடும் எதிர்ப்பு!!

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சங்­க­ளில் மக்­க­ளின் காணி­க­ளில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டும் என்று மக்­க­ளும், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும் வலி­யு­றுத்­தி­னர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச ஒருங்கிணைப் புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. அதில் முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­புப் பகு­தி­க­ளில் படை­யி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய காணி­களை மீட்­பது தொடர்­பா­க­வும், படை­யி­னரை அங்­கி­ருந்து அகற்­று­வது தொடர்­பா­க­வுமே அதி­கம் விவா­திக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சத்­தில் படை­யி­னர் நிலை­கொண்­டுள்ள – அவர்­க­ளு­டைய கட்­டுப்­பாட்­டில் உள்ள காணி­க­ளின் அள­வு­களை அவர்­கள் பிர­தேச செய­ல­ரி­டம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக் கைய­ளிக்க வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

புதுக்­கு­டி­யி­ருப்­பில் படை­யி­ன­ருக்கு காணி வழங்­கு­வ­தில்லை என்றே மக்­க­ளும், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும் தமது கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­த­னர். மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை விட்டு படை­யி­னர் செல்ல வேண்­டும் என்­ப­தி­லும் உறு­தி­யாக இருந்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் அடுத்த கூட்­டத்­தில் இறுக்­க­மான முடி­வு­கள் எட்­டப்­ப­டும் என்று இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­துக்­குட்­பட்ட வேணா­வில், புதுக்­கு­டி­யி­ருப்பு பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னைக் காணி உள்­ளிட்ட காணி­க­ளில் படை­யி­னர் முகா­மிட்டு நிலை கொண்­டுள்­ள­னர். அவற்­றில் பல ஏக்­கர் காணி­கள் மக்­க­ளு­டை­யவை. இந்­தக் காணி­களை விடு­விக்க வேண்­டும் என்று அந்­தக் காணி உரி­மை­யா­ளர்­கள் கடந்த காலங்­க­ளில் பெரும் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­ட­போ­தும், அந்­தக் காணி­கள் முழு­மை­யாக விடுக்­கப்­ப­ட­வில்லை. அவற்றை விட்டு இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும் என்று மக்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

You might also like