முஸ்­லிம் மீதான தாக்­கு­தல் ஐ.நாவில் நெருக்­கடி தரும்!!

நல்­லி­ணக்க நகர்­வு­க­ளில் பன்­னாட்­டுச் சமூ­கம் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கும் நிலை­யில் முஸ்­லிம்­கள் மீதான அடக்­கு­முறைச் செயற்­பா­டு­கள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தும். ஜெனிவா அமர்­வில் அவற்­றுக்­கான பிர­தி­ப­லிப்­பு­கள் வெளிப்­ப­டும்.

இவ்­வாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது,

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இலங்கை அர­சாக நாம் நல்­லி­ணக்க நகர்­வு­கள் தொடர்­பில் பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­துள்­ளோம். அதில் பிர­தா­ன­மா­னது புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தா­கும்.

ஜெனிவா கூட்­டத்­தொ­ட­ரில் இலங்­கைக்கு நெருக்­க­டி­யாக சில விட­யங்­கள் அமை­யும். நாம் இன்­னும் முன்­னெ­டுக்க வேண்­டிய சில நட­வ­டிக்­கை­க­ளில் முன்­னேற்­றங்­கள் இடம்­பெற வேண்­டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டும்.

அண்­மைக் கால­மாக நாட்­டில் சிறு­பான்மை மக்­கள் மீதான சில அடக்­கு­முறை சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்ள நிலை­யில் இவை எமக்கு பெரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்க முடி­யும். இந்த சம்­ப­வங்­கள் இப்­போதே பன்­னாட்டு ஊட­கங்­க­ளில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளன.

இவை தொடர்­பில் கேள்வி எழுப்­பப்­ப­ட­லாம். அர­சாக நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய முக்­கிய நட­வ­டிக்­கை­க­ளில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். இந்த நாட்­டில் சிறு­பான்மை மக்­க­ளின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

இதில் ஒரு சிலர் தமது அர­சி­யல் சாத­கத்­தன்­மையை கருத்­தில் கொண்டு இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­ற­னர். அதற்கு அரசு ஒரு­போ­தும் இட­ம­ளிக்­கக் கூடாது.

சிங்­கள மக்­க­ளுக்கு உள்ள அதே உரிமை இந்த நாட்­டின் தமிழ், முஸ்­லிம் மக்­க­ளுக்­கும் உள்­ளது. அதை நாம் அனை­வ­ரும் ஏற்­று­கொள்ள வேண்­டும். அங்­கீ­க­ரிக்­க­வும் வேண்­டும்.

இன­வா­தம் மூலம் நாட்­டில் ஒரு­போ­தும் ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாது. விரை­வில் தீர்­வு­கள் குறித்து நாம் சிந்­திக்க வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது – என்­றார்.

You might also like