முக­நூல் தடை நீடித்­தால் இளை­யோர் போரா­டு­வர்!!

முக­நூல் மீதான தடையை எதிர்த்து ஆயி­ரக்­க­ணக்­கான இளை­யோ­ரு­டன் வீதி­யில் இறங்­கிப் போரா­டத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று எச்­ச­ரித்­துள்­ளது மகிந்த அணி.

மகிந்த அணி ஏற்­பாடு செய்த செய்­தி­யா­ளர் சந்­திப்பு கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்மன்­பி­லவே இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்ததாவது:-

கண்டிப் பிர­தே­சத்­தில் ஏற்­பட்ட முறு­கல் நிலை தற்­போது முடி­வுக்கு வந்­துள்­ளது. ஊர­டங்குச் சட்­டம் நீக்­கப்­பட்­டுள் ளது. நாளை மறு­தி­னத்­து­டன் (நாளை) அவ­சர காலச் சட்­ட­மும் நீக்­கப்­பட உள்­ளது. ஆனால் முக­நூல் மீதான தடை இன்­ன­மும் நீக்­கப்­ப­ட­ வில்லை.

இன­வாத முறு­கலை தடுப்­ப­தற்­காக என்று கூறிக் கொண்டு அர­சுக்கு எதி­ரான சமூக வலைத்­த­ளங்­களை கட்­டுப்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றது. இந்த தடை எவ்­வி­தத்­தி­லும் நடை­மு­றைச் சாத்­தி­ய­மில்லை. தற்­போது இளை­யோர் திருட்­டுத்­த­ன­மாக முக­நூல்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

வெறுப்­புப் பரப்­பு­ரை­க­ளைப் பரப்­பு­வ­தற்கு முக­நூல் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று கூறி அதனை தடை செய்­துள்­ளமை வேடிக்கை. இந்­தத் தடைக்கு எதி­ராக ஆயி­ரக்­க­ணக்­கான இளை­யோ­ரு­டன் வீதி­யில் இறங்­கிப் போரா­டத் தயா­ராக இருக்­கின்­றேன் – என்­றார்.

You might also like