பட்­டுப்­பாதை உரு­வாக்­கம் பயத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது- மைத்திரி!!

சீனா­வின் பட்­டுப்­பாதைத் திட்­டம் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யக் கூடாது என்று தெரி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஜப்­பான் ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர் இவ்வாறு கூறி­யுள்­ளார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-,

சீனா ஏனைய நாடு­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா, தமது இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முடி­யும் என்­பது தொடர்­பான கரி­ச­னையை அறிந்து வைத்­தி­ருக்­கி­றேன்.ஷ

இரு­த­ரப்பு உறு­திப்­பா­டு­க­ளை­யும், உடன்­ப­டிக்­கை­யை­யும் மீறு­வ­தற்கு இலங்கை அரசு ஒரு­போ­தும் இட­ம­ளிக்­காது. இந்து – பசு­பிக் பிராந்­தி­யத்­தில் சுதந்­திர மற்­றும் திறந்த நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விக்க, எமது நாட்­டில் ஜப்­பான் மேற்­கொள்­ளும் உட்­கட்­ட­மைப்பு பணி­களை ஊக்­கு­விக்­கின்­றோம்.- என்­றார்.

You might also like