கண்­டி­யைக் காட்டி அரசு தன் வேலையை முடிக்­கி­றது

நாட்­டின் கவ­னத்­தைக் கண்­டி­யின் பக்­கம் திருப்­பி­விட்டு பல­வந்­த­மா­கக் காணா­மல் போவ­தி­லி­ருந்து அனை­வ­ரை­யும் பாது­காக்­கும் சட்­ட­வ­ரைவை நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றி­யது. அதைப் போன்று புதிய அர­ச­மைப்­பை­யும் நிறை­வேற்­றிக் கொள்ள அரசு முற்­ப­டு­கின் றது.

இவ்­வாறு கூறி­யுள்­ளார் முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான ஜி.எல்.பீரிஸ்.
பத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது,

பல­வந்­த­மா­கக் காணா­மல்­போ­வ­தி­லி­ருந்து அனை­வ­ரை­யும் பாது­காக்­கும் சட்­டத்­துக்கு மகா­நா­யக்க தேரர்­கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­த­னர். இரண்டு தட­வை­கள் நாடா­ளு­மன்­றில் சட்­ட­வ­ரைவை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு அவை கைவி­டப்­பட்­டன.

ஆனால், கண்­டிக் கல­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நாட்­டின் பார்­வையை வேறு திசை­யில் செலுத்தி சட்­ட­வ­ரைபை அரசு நிறை­வேற்­றி­யுள்­ளது. தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தை­யும் அவ்­வாறே அரசு நிறை­வேற்­றத் தயா­ரா­கின்­றது – என்­றார்.

You might also like