அறுகுவெளியில் உப்பளம் அமைக்க அனுமதி!!

கேரதீவு அறுகுவெளிப் பகுதியில் 100 ஏக்கர் நிரப்பரப்பில் உப்பளம் அமைக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் சுற்றாடல் திணைக்களத்தினால் நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது.

நாவற்குளி – பூநகரி சாலையில் 15 ஆம் 16 ஆம் கிலோ மீற்றர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் உப்பளம் அமைப்பதலாம், பருவ காலத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், 25 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதியினால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

You might also like