ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு – மோதரை பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிக்கு முன்னால் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது நேற்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like