மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் உருவான தாழமுக்கம் நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.

அதன் காரணமாக தீவின் பல பாகங்களிலும், சூழவுள்ள கடல்பரப்பிலும் மேக மூட்டத்துடன் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்  என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குறிப்பாக தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

You might also like