5473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ஆம் தர ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

தேசிய பாடசாலையில் ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் முதல் கட்ட இடமாற்றம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டஇடமாற்றம் இந்த வருட முற்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இந்த மாத இறுதியில் இடம்பெறும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like