ஆயுத இறக்குமதி- இந்தியா முதலிடம்!!

ஆயுத இறக்குமதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று சுவீடனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

2013 முதல் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 12 சதவீதம் ஆகும்.

அதேபோன்று 2008 முதல் 2012 மற்றும் 2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த மொத்த ஆயுதங்களில், 62 சதவீதத்தை ரஷ்யாவும், 15 சதவீதத்தை அமெரிக்காவும், 11 சதவீதத்தை இஸ்ரேலும் விநியோகம் செய்துள்ளன. ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.

ஆசிய மண்டலத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் இந்தியாவிற்கு ஆயுத விற்பனையின் அளவை அதிகரித்துள்ளது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like