மட்டக்களப்பில் விஞ்ஞானக் கண்காட்சி!!

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் விஞ்ஞானப்பாட ஆசிரியர்களினாலும், மாணவர்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட “விஞ்ஞானக் கண்காட்சி” கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராசா தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விஞ்ஞானப்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ரீ.ஞானசேகரம், ஆசிரியர் ஆலோசகர் பீ.சர்வேஸ்வரன் (விஞ்ஞானம்), விஞ்ஞான பாட இணைப்பாளர் திருமதி. விஜயலஷ்மி அனந்தராஜா, பழைய மாணவர்சங்க செயலாளர் அ.ஜெகநாதன், பொதுச்செயலாளர் சில்வெஸ்டர், பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளைத்தலைவர் எஸ்.சுரேஸ்குமார் உட்பட பிரதியதிபர்கள், விஞ்ஞான ஆசிரியர்கள், மாணவர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நூற்றுக்கு மேற்பட்ட விஞ்ஞானப்புத்தாக்க புதிய கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானப்பொருள்கள், இலத்திரனியல் பொருள்கள், விவசாய விஞ்ஞானச் செயன்முறைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

  

You might also like