கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

நாவலவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர், கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே 5 லட்சம்
பெறுமதியான சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார்.

அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறும்
உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்ததை தொடர்ந்து துப்பாக்கியை காட்டி இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

You might also like