முகநூல் தடைக்கு எதிராக முறைப்பாடு!!

சமூக வலைத்தளங்கள் மீதான தடைக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் கோரியுள்ளது.

தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றுசட்டத்தரணிகள் ஒன்றியம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அடிப்படை உரிமை மீறப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்பாடல் வழிமுறைகளை முடக்கியமை, மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like