இலங்கையில் சிசு இறப்பு வீதம் குறைவடைந்தது!!

இலங்கையில் தாய் மற்றும் சிசு இறப்பு வீதத்தைப் கட்டுப்படுத்தல் மற்றும் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குச் சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நாட்டில் சிசு இறப்பு வீதம் குறைந்திருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது. தாய் மற்றும் சிசு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

You might also like