வயிற்றுக்குள்- 100 மீன் முட்கள்!!

வயிற்றுக்குள் சிக்கிய ஊசி போன்ற 100 மீன் முட்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் சீனாவைச் சேர்ந்த மருத்துவர்கள்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷோவ் என்பவர் மீன் பிரியர். அவர் ஏகப்பட்ட சிறு மீன்களைச் சமைத்து சூப் வைத்துக் குடித்தார்.
மறுநாள் காலையில் தொண்டையில் சின்னதாக வலி. மீன் முள்தான் என்று புரிந்தது. ’தன்னால சரியாயிரும்’ என்று நினைத்துக்கொண்டு அதைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

சில நாள் கள் கழித்து வயிற்றின் அடிப்பகுதியில் வலி அதிகரிக்க, சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அவரது மலக்குடலில் ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள். இரண்டு மணி நேரம் போராடி, ஊசி போன்ற அந்த மீன் முட்களை எடுத்தனர் மருத்துவர்கள்.

‘அதிகமான மீன் முட்கள் காரணமாக அவரது மலக்குடல் பயங்கரமாக வீங்கிவிட்டது. ஒரே நேரத்தில் அனைத்தையும் எடுக்க முடியாது என்பதால் வீட்டுக்கு அனுப்பினோம். அந்த நாள்களில் பாதியாவது வெளியேறியிருக்கும் என நினைத்தோம்’ என்றார் மருத்துவர் ஹுவாங் ஜியின்.

You might also like