இலங்கைப் பெண் சவுதியில் சுட்டுக் கொலை!!

சவுதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சவுதியைச் சேர்ந்த ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

கொலை செய்த அவரும், அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

You might also like