ஐ.பி.எல். 2018 -புதிய பாடல் வெளியீடு!!

ஐ.பி.எல். 2018 புதிய சீசனுக்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து வெளியிட்ட இந்தப் பாடல் பங்கேற்றுள்ள எட்டு அணிகளின் ஸ்ரார் வீரர்களின் முக்கிய தருணங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் ரசிகர்கள் அவர்களது அணிகளை உற்சாகப்படுத்திய முக்கிய நிகழ்வுகளும் பங்கேற்றுள்ளன. இந்தப் பாடலை தென் ஆபிரிக்காவின் திரைப்பட இயக்குநர் டான் மேக் இயக்கியுள்ளார்.

ராஜிப் வி பால்லா மற்றும் சித்தார்த் பசூர் ஆகியோர் இப்பாடலுக்கு இசையமைந்துள்ளனர். இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் ( ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு) பாடப்பட்டுள்ளன . ‘Best vs Best’ என்பதை மையமாகக் கொண்டு இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

You might also like