தென்மராட்சியில் மகளிர் தின நிகழ்வு

தென்மராட்சி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான பன்னாட்டு மகளிர் தின நிகழ்வுகள்  பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.

கடந்த வருடம் வலய சமுர்த்தி அலகுடன் இணைந்து சிறந்த சமூகப் பணியில் ஈடுபட்ட நான்கு மகளிர்கள் அந்தந்த வலயங்களால் தெரிவு செய்யப்பட்டு சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டன.

கைதடி சமுர்த்தி வலயத்தில்  திருமதி  உதயகலா அருந்தவபாலனும் சாவகச்சேரி சமுர்த்தி வலயத்தில், திருமதி வசந்தராணி தங்கராசாவும், கொடிகாமம் சமுர்த்தி வலயத்தில் செல்வி இராசமணி வேலுப்பிள்ளையும், வரணி சமுர்த்தி வலயத்தில் திருமதி நகுலேஸ்வரி விஜயகுமாரும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

You might also like