மாற்றுப் பாதைகளை பயன்படுத்தவும்!!

கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்துள்ளது. அதனைத் திருத்தும் பணியில் இடம்பெற்று வருவதால் மாற்று வழிகளைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து காணப்படுகிறது. அதனால் மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி,முச்சக்கர வண்டி போன்ற சிறியரக வாகனங்களைத் தவிர ஏனைய கனரக வாகனங்கள் பேருந்துள் என்பன பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதான வீதி பாலத்தின் வழியாக திருகோணமலை,மூதூர்,கிண்ணியா போன்ற கொழும்பு பேருந்துகள் பயணிக்கின்றன. எனவே பால திருத்த வேலை முடியும் வரை மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like