முல்­லைத்­தீ­வில் வடி­சாலை அமைக்­கப்­பட வேண்­டும்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வடி­சாலை ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை கட்­டா­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. புதுக்­கு­டி­யி­ருப்­பில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் காலத்­தில் வடி­சாலை ஒன்று சிறப்­பாக இயங்­கி­வந்­தது.

அது மது­போ­தைக்­காக பாவிக்­கப்­ப­ட­வில்லை. அப்­போது அதில் இருந்து வடித்­தெ­டுக்­கப்­பட்ட அற்­க­கோ­லில் இருந்து தான் மருத்­து­வ­ம­னை­க­ளில் சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு தேவை­யான ஸ்பிறிற் எடுத்­தோம் அது­மட்­டு­மல்ல வினா­கிரி எடுக்­கப்­பட்­டது. வெல்­லம் எடுக்­கப்­பட்­டது இவற்றை நல்­ல­வி­ட­யங்­க­ளுக்­காக நாங்­கள் பாவிக்­கும் போது அவை நல்­ல­வி­ட­ய­மா­கவே இருக்­கும். கெட்­ட­வி­ட­யங்­க­ளுக்கு பாவிக்­கப்­ப­டும் போது­தான் அவை கெட்­ட­வை­யாக காட்­டப்­ப­டு­கின்­றன.

வன்­னி­மா­வட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் இவ்­வாறு தெரி­வித்­தார். ஐய­னார் கோவி­லடி ஒட்­டு­சுட்­டான் வீதி 10ஆம் வட்­டா­ரம் புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தி­யில் அமை­யப்­பெற்ற முல்­லைத்­தீவு மாவட்ட பனை­தென்­னை­வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் சமாச கட்­ட­டத் திறப்பு நிகழ்வு தலை­வர் பிரான்­சிஸ் விஜ­யச்­சந்­தி­ரன் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இன்று வன்­னி­யில் தின­சரி உற்­பத்தி செய்­யப்­ப­டும் பெருந்­தொ­கை­யான கள்­ நிலத்­தில் ஊற்­றப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் இதையே வாழ்­வா­தா­ர­மாக நம்பி வாழும் குடும்­பங்­கள் மிக­வும் பாதிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. கடந்த 2017ஆம் ஆண்டு கள் அடைப்பு நிலை­யத்­துக்­கான ஆண்டு வரி முன்­னர் இரண்டு இலட்­ச­மாக இருந்­தது. அது பத்து இலட்­ச­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

கித்­துள் மரத்­தில் இருந்து இறக்­கப்­ப­டும் கள் அதி­கப்­ப­டி­யாக வெல்ல உற்­பத்­திக்கு பாவிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் பனை­யில் இருந்து உற்­பத்தி செய்­யப்­ப­டும் கள்­ளில் இருந்து அதி­கப்­ப­டி­யாக மது­போ­தைக்கு பாவிக்­கப்­ப­டு­வ­தாக ஆய்­வின் போது அரசு தெரி­வித்­துள்­ளது. இத­னால் பனை, தென்னை கள்­ளு­க்­கான வரி­யை நீக்­க­மு­டி­யாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘தற்­போது போத்­த­லில் அடைக்­கப்­ப­டும் கள் என்­பது வெளி­நா­டு­க­ளில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ஸ்பிறிட் இதற்­குள் சில வாச­னை­கள் சேர்த்து அதில் பல கல­வை­களை கலந்து கள் என்ற போர்­வை­யில் பொய்­யாக விற்­கின்­றார்­கள். இப்­ப­டிப்­பட்ட இடங்­க­ளுக்கு அரசு விதித்­தி­ருக்­கும் வரி­கள் பொருந்­தும் ஆனால் சாதா­ரண மக்­கள் இயற்கை கள் உற்­பத்­திக்கு அரசு விதித்­தி­ருக்­கும் இந்த வரி தடை­யாக இருக்­கின்­றது.

இந்த வரி அதி­க­ரிப்பு வன்­னிப் பிர­தே­சத்­தில் பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று நாடா­ளு­மன்­றத்­தில் எடுத்­துக் கூறி­யுள்­ளேன். தேசிய கட்­சி­கள் என்­றும் தமி­ழர்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக போரா­டப்­போ­வ­தில்லை. கூட்­ட­மைப்பு ஒன்றே தமி­ழர்­க­ளின் உரி­மை­யை எங்­கும் கொண்டு செல்­லும் என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு ஆச­னத்­துக்­காக வர­வில்லை- – என்­றார்.

You might also like