முட்டை குருமா

 

தேவையானவை

முட்டை – 4
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 15
தக்காளி – 2
பிரியாணி இலை – 2
சீரகம் – 1 கப்
கறிவேப்பிலை –சிறிதளவு
துருவிய தேங்காய் – அரை கப்
முந்திரிபருப்பு – 5
கசகசா – 1 ஸ்பூன்
பட்டை – 1
கராம்பு – 1
ஏலக்காய் – 1
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சோம்பு – கால் ஸ்பூன்

 

 

செய்முறை

முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

பட்டை,கராம்பு,ஏலக்காய்,,பூண்டு,இஞ்சி,சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.

தேங்காய் ,முந்திரிபருப்பு,கசாகசா மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, , சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

சிறிது நேரம் வதங்கிய பின்பு,பட்டை கராம்பு விழுதைச் சேர்த்து சிறிய தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள்,தனியா தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்

கடைசியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான முட்டை குருமா ரெடி

You might also like