குறுந்­தூர பேருந்து சேவை­க­ளால் அவ­திப்­ப­டும் பய­ணி­கள்!!

கிளி­நொச்சி நக­ரத்­தில் பரந்­தன் – முறி­கண்­டிக்கு இடை­யில் குறுந்­தூர போக்­கு­வ­ரத்­துச் சேவை­யில் ஈடு­ப­டும் பேருந்­து­கள் தொடர்­பில் பொது­மக்­கள் தொடர்ந்­தும் அதி­ருப்தி வெளி­யிட்டு வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பய­ணி­கள் தரப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
பேருந்­துச் சார­தி­க­ளும், நடத்­து­நர்­க­ளும் அடா­வ­டி­யாக நடக்­கின்­ற­னர். மாறு­பட்ட ரீதி­யில் கட்­ட­ணங்­களை அற­வி­டு­கின்­ற­னர். பய­ணச்­சீட்டு வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

மிகு­திப் பணம் கேட்­டால் மட்­டுமே தரு­கி­றார்­கள். ஏறி, இறங்­கு­வதற்கு போதிய கால அவ­கா­சம் தரு­வ­தில்லை. ஆலாய்ப் பறக்­கின்­ற­னர். மிதி­ப­ல­கை­யில் கால்­களை வைக்­கு­முன்­னரே பேருந்­து­களை இழுத்து விடு­கின்­ற­னர்.

அதே­போல் இறங்­கும்­போ­தும் அவ­ச­ரப்­ப­டுத்­து­கின்­ற­னர். பய­ணி­கள்­மீது எரிந்து விழு­கின்­ற­னர். இத­னால் கைக்­கு­ழந்­தை­க­ளு­டன் ஏறு­ப­வர்­க­ளும், சிறப்புத் தேவையுடையோரும், கர்ப்­பி­ணித் தாய்­மார்­க­ளும், வய­தா­ன­வர்­க­ளும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

பய­ணி­களை ஏற்­று­வ­தற்­காக கண்ட இடங்­க­ளி­லும் பேருந்­து­களை நிறுத்­து­ கி­றார்­கள். ஆனால் இறங்­கும்­போது சில­வே­ளை­க­ளில் உரிய தரிப்­பி­டங்­க­ளில்­கூட நிறுத்­தா­மல் செல்­கி­றார்­கள்.

அண்­மை­யில் கர­டிப்­போக்கு சந்­தி­யில் தள்­ளா­டிய நிலை­யில் பேருந்­தில் ஏற முயன்ற வயோ­தி­பப் பெண்­ம­ணி­யி­டம் நடத்­து­நர் பரந்­த­னில்­தான் நிறுத்­து­ வோம், இடை­யில் எந்த இடத்­தி­லும் நிறுத்த மாட்­டோம். விரும்­பி­னால் ஏறுங்­கள், இல்­லா­விட்­டால் ஏறா­தீர்­கள் என்று அதி­கா­ரத் தொனி­யில் கூறி­னார்.

காலை நொண்டி நொண்டி நடந்த அந்­தப் பெண்­ வேறு வழி­யின்றி ஏறிச்­சென்­றார். அவ்­வா­றெ­னில் கர­டிப்­போக்­குச் சந்­திக்­கும் பரந்­த­னுக்­கு­மி­டை­யில் பேருந்­து­களை நிறுத்­து­வ­தற்கு அனு­ம­தி­யில்லை என்­ப­து­தானே அர்த்­தம்.

ஆனால் பரந்­த­னில் இருந்து புறப்­பட்டு வரும்­போது மட்­டும் வழி­நெ­டு­கி­லும் பேருந்­து­களை நிறுத்தி பய­ணி­களை ஏற்றி வந்­த­னர். நெல் ஆராய்ச்சி நிலை­யம் மற்­றும் அத­னோடு இணைந்த பல திணைக்­க­ளங்க­ளும் குடி­யி­ருப்­பு­க­ளும் காணப்­ப­டும் இந்த இடத்­தில் பேருந்தை நிறுத்த மறுப்­பது ஏன் எனப் புரி­ய­வில்லை.

இவ்­வாறு நாளாந்­தம் பல சம்­ப­வங்­கள் நடக்­கின்­றன. இது தொடர்­பில் ஊட­கங்­கள் பல­த­ட­வை­கள் சுட்­டிக்­காட்­டி­விட்­டன. ஆனா­லும் பேருந்து சேவை இன்­ன­மும் திருப்­தி­க­ ர­மாக இயங்­க­வில்லை. மக்­களை ஏற்றி இறக்­கு­வ­து­தானே பேருந்­து­க­ளின் வேலை. ஆனால் இந்­தப் பேருந்­து­க­ளின் வேடிக்கை என்­ன­வெ­னில் ஏற்­று­வ­துக்­கும் இறக்­கு­வ­துக்­குமே நேரம் இல்லை என்­ப­து­தான்.

அப்­ப­டி­யா­யின் இவற்­றின் சேவை­நோக்­கம் என்­ன­வாக இருக்கும் என்று மக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். இது தொடர்­பில் கிளி­நொச்சி மாவட்ட தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத் தலை­வ­ரி­டம் கேட்­பதற்கு பல­முறை முயன்­றோம். எனி­னும் அவர் எமது தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like