புகை­யிலை அறு­வடை ஆரம்­பம்!!

வட­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் புகை­யிலை அறு­வடை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது எதிர்­வ­ரும் ஏப்­ரல் மாதம் நடுப்­ப­கு­தி­வரை புகை­யிலை அறு­வடை நீடிக்­கும்.
குடா­நாட்­டில் வட­ம­ராட்சி பிர­தே­சத்­தில் அதி­க­ளவு பரப்­ப­ள­வில் புகை­யி­லைப் பயிர்ச்­செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­த­முறை புகை­யிலை விளைச்­சல் திருப்­தி­க­ர­மாக இருந்­த­தாக புகை­யிலை செய்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர் பிர­தே­சத்­தில் அறு­வடை செய்­யப்­ப­டும் புகை­யிலை செடி ஒன்று 180 ரூபா­வாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

இதே­வேளை வலி­கா­மம் பிர­தே­சத்­தில் அறு­வடை செய்­யப்­ப­டும் புகை­யி­லை­யை­யும் வட­ம­ராட்சி பிர­தேச புகை­யிலை வர்த்­த­கர்­கள் கொள்­வ­னவு செய்­து­வ­ரு­கின்­ற­னர். வலி­கா­­மம் பிர­தே­சத்­தில் புகை­யிலை செடி ஒன்று 110 ரூபா­வாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

அறு­வடை செய்­யப்­பட்ட புகை­யி­லையை கொள்­வ­னவு செய்த புகை­யிலை வர்த்­த­கர்களும் உற்­பத்­தி­யா­ளர்­க­ளான சில விவ­சா­யி­க­ளும் அவற்றை உலர்த்தி புகை­யிட்டு பத­னி­டும் பொருட்டு சுவர்­க­ளில் வெயி­லில் காய போட்­டு­வ­ரு­கின்­ற­னர்.

புகை­யிலை பயிர் வட­ம­ராட்­சி­யின் பிர­தேச விவ­சா­யி­க­ளின் ‘பணப் பயிர்’ என்­பது குறிப்­பி­ டத்­தக்­கது.

You might also like