திருட்டுக் குற்றச்சாட்டு சிறுவர்களுக்கு மறியல்!!

திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  சிறுவர்களை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்டமை தொடர்பாக சிறுவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது,   மட்டக்களப்பிலிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் பாதுகாப்பில் வைத்து சிறுவர்களைப் பராமரித்து அடுத்து தவணைக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் 10 தொடக்கம் 14 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like