மாங்கல்ய பாக்கியம் அருளும் காரடையான் நோன்பு!!

இந்து மதம் இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெரும் பேறு பெற்ற ஒரு மதம் ஆகும் ,இந்து சாஸ்திரீகம் இதிகாஷம் ஆகமங்களில் இவ்வுலக இயக்கத்திற்கும் இப் பிரபஞ்சத்தில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழும் வழிவகைளையும் சொல்லி இருக்கின்றது.

இதில் சக்தி வழிபாடு முதன்மையுடையதாக இருப்பதனைக் காணலாம்
சிவனுடன் இனைந்த சக்தி அம்பிகை , அம்பாள் பராசக்தி , உலக நாயகி , என்ற பொதுப் பெயர்களிலும் துர்க்கை , இலட்சுமி , சரஸ்வதி என்ற சிறப்பு பெயர்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது சமய மரபு.

கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு நாளை புதன்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டிய, பூஜை செய்யவேண்டிய நேரம் : நாளை இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

இந்த நேரத்தில் பெண்கள், பூசை செய்து வழிபட்டு, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, சரடு அணிந்து கொண்டு, பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த பூசையின் போது, சொல்லவேண்டிய ஸ்லோகம்:

தோரம் க்ரஹணாமி ஸூபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸூப்ரீதா பவ ஸர்வதா:

அதாவது, ‘கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, நான் இந்தக் காரடையான் நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, நின்னருளால், சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா. என்றும் காத்தருள்வாய் அன்னையே!’ என்று அர்த்தம் என்கிறார்கள்.

இந்த சக்தி விரதம்களில் சாவித்திரி விரதம் ,சுவர்ன கெளரி விரதம் , வெள்ளிக்கிழமை விரதம் , காரடையான் நோன்பு , வரலெட்மி விரதம் , நவராத்திரி விரதம் , என்பன மிக முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது

இந்த விரத வகைகளுள் சுமங்கலிப் பெண்களுக்கான விரதமாகக் காரடையான் நோன்பு மிக முக்கிய இடத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இவ் விரதமானது தனது மாங்கல்யபாக்கியம் நிலைக்க மேற்கொள்ளப்படும் விரதமாகும்.

இந்த காரடையான் நோன்பு ஒவ்வொரு ஆண்டும் மாசிமாத முடிவும் பங்குனி மாதப் பிறப்பும் சந்திக்கின்ற தினத்தில் சுமங்கலிப் பெண்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இம் மாதம் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படல் வேண்டுமென வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நாளில் சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் உள்ள பாசிபடந்த (பழைய) தாலிச்சரடை மாற்றி (மஞ்சள் கயிறு) புதிய தாலிச் சரடை மாற்றிக் கொள்வது ஒவ்வொரு இந்து சுமங்கலிப் பெண்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

காரடையா நோன்பின் தத்துவம்… கணவனோடு எப் பொளுதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதே ஆகும் இவ் விரதத்தின் மகிமையினை எடுத்துக் கூறுதவதாக சத்தியவான் சாவித்திரியின் வரலாறு கூறுகின்றது புரான காலத்தில் சத்தியவானும் சாவித்திரியும் வனத்திலிருந்த பொழுது சத்தியவான் தன் முன்ஜன்மப் பலனினால் மாண்டு விடுகின்றான்.

இதனால் துடிதுடித்துப் போன சாவித்திரி தன் கணவனின் உயிரை திரும்பித்தர சக்தியின் சொருபமான உமையினை நோக்கி கடும் தவம் புரிகின்றாள் இப் பூசைக்கு காடுகளில் இயர்கையாக விழைந்த கார் அரிசி (தவிடு நீக்காத சிவப்பு பச்சை அரிசி) உருகாத வெண்ணைய் , வெல்லம் மூன்றையும் ஒன்றாக கலந்து அடை செய்து (உருண்டையாக்கி) தேவிக்கு நைவேதனமாக சமர்ப்பித்தாள்.

இந்தத் தவத்தின் பயனாக தனது கணவனை மீளப் பெற்று, தனது மாங்கல்யத்தினை மீள பெற்று காப்பாற்றிக் கொண்டாள் இது போன்று மகாபாரதத்தில் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்துள்ளாள் என கணவனின் பெருமை சிறப்பிக்கப்பட்டுள்ளது .

பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவரும் சரிபாதியாக உள்ளபோதிலும் கணவணின் மரணத்திற்கு பின் மனைவி சமுகத்திலிருந்து தூர வைக்கப்பட்டவளாகின்றாள்.

எனவே தான் தன் மாங்கல்யப் பாக்கியம் வாழ்நாள் முழுவதும் நிலைக்க வேண்டுமென ஒவ்வொரு சுமங்கலிப் பெண்களும் இந்த காரடையா நோன்பினை கடைப்பிடித்து இல்லறத்தில் நல்லறம் காண்பது சிறப்பு எனலாம் .

You might also like