கயிறிழுத்தல் போட்டியில் கலைமகள் சம்பியனானது

தென்மராட்சிப் பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கு இடையி லான கயிறிழுத்தல் போட்டியில், கச்சாய் கலைமகள் அணி கிண்ணம் வென்றது.

தென்மராட்சிப் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான விளை யாட்டு விழா சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பெண்கள் பிரிவு கயிறிழுத்தல் போட்டியில் கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கைதடி நாவற்குழி சிறிமகாவிஸ்ணு அணி களமிறங்கியது. கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

You might also like