முழுமையான விசாரணைகளின் பின் சதிகாரர்களின் பெயர்கள் அம்பலம்!!

கண்டியில் ஏற்பட்ட இனவன்முறையின் பின்னணியைக் கண்டறிவதற்காகப் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவை முடிவடைந்த பின்னர் சூத்திரதாரிகளின் பெயர், விவரங்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கண்டி உட்பட நாட்டின் சில பகு­தி­க­ளில் இடம்­பெற்ற குற்­றச் ­செ­யல்­க­ளு­டன் தொடர்­பு­டைய 230 பேர் நேற்­று­வரை கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதில் 161 பேர் கண்டி மாவட்­டத்­தி­லும் ஏனைய 69 பேர் வெளி இடங்­க­ளி­லும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கண்டி நிர்­வாக மாவட்­டத்­துக்குப் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் ஊட­ரங்­குச் சட்­டம் முற்­றாக நீக்­கப்­பட்­டுள்­ளது. இன வன்­மு­றை­யை­ அடுத்து மூடப்­பட்­டி­ருந்த பாட­சா­லை­க­ளும் நேற்று முதல் மீள இயங்க ஆரம்­பித்­துள்­ளன. முடங்­கிப்­போ­யி ­ருந்த கண்டி மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை ­யும் வழ­மைக்­குத் திரும்­பி­யுள் ளது.

இந்­த நி­லை­யில், கண்டி மாவட்­டத்­தின் தற்­போ­தைய நிலமை தொடர்­பில் மொன­ரா­க­லை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் பங்­கேற்றுக் கருத்து வெளி­யிட்ட சட்­டம், ஒழுங்கு அமைச்­சர் ரஞ்­சித் மத்­தும பண்­டார தெரி­வித்­த­ தா­வது:

கண்டி மாவட்­டத்­தில் கடந்த இரண்டு நாள்­க­ளில் எவ்­வித அசம்­பா­வி­தங்­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. மக்­க­ளின் பாது­காப்பு உறு­திப்­­படுத்­தப்­பட்­டுள்­ளது. பொலி­ஸா­ரும் விழிப்­பா­கவே இருக்­கின்­ற­னர்.

கண்டி மாவட்­டத்­தில் இடம்­பெற்ற இன­ வன்­மு­றை­யின் பின்­ன­ணி­யில் வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­க­ளும் தொடர்­பு­பட்­டுள்­ள­னர். சில அர­சி­யல்­வா­தி­கள் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்­குச் சென்று, கைதா­ன­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு மிரட்­டல் விடுத்­துள்­ள­னர்.

பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளும் தொடர்­பு­ பட்­டுள்­ள­னர் என்று தக­வல் கிடைத்­துள்­ளது. தற்­போது விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அவை முழு­மை­யாக முடி­வ­டைந்த பின்­னர் பின்­ன­ணி­யி­லி­ருந்து செயற்­பட்­ட­ வர்­க­ளின் பெயர், விவ­ரங்­கள் நாட்­டுக்­குப் பகி­ரங்­கப்­­படுத்­தப்­ப­டும்.

குரோத அர­சி­யலை அனை­வ­ரும் கைவி­ட­வேண்­டும். குறு­கிய நோக்­கங்­க­ளுக்­காக இத்­த­கைய செயற்­பா­டு­க­ளில் எவ­ரும் ஈடு­ப­டக்­­ கூடாது. சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு எதி­ராகக் கடும் சட்ட நட­ வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். தம்­மீ­தான குற்­றச்­செ­யல்­களை மறைப்­ப­தற்கு, அமைச்­சர்­கள்­மீது பழி­போ­டு­வ­தற்குச் சிலர் முயற்­சிக்­கின்­ற­னர் – – என்­றார் சட்­டம், ஒழுங்கு அமைச்­சர்.

You might also like