அரபுநாடுகளுடன் பகைமை உருவாகும் அபாயம்!!

மத்­திய கிழக்கு நாடு­க­ளு­டன் பகைமை ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் காணப்­ப­டு­வ­தாகச் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

இன­வாத அடிப்­ப­டை­யில் இலங்­கை­யில் தாக்­கு­தல்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டால், மத்­திய கிழக்கு நாடு­க­ளில் இலங்­கை­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் தொழில் வாய்ப்­புக்­கள் முடக்­கப்­ப­டக்­கூ­டும். கண்­டி­யில் இடம்­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் சில நாடு­களை வருத்­தம­டை­யச் செய்­தது.

பெரும் எண்­ணிக்­கை­யி­லான இலங்­கை­யர்­கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளில் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இந்த இலங்­கைப் பணி­யா­ளர்­கள் நாட்­டுக்குத் திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டால் நாட்­டில் பெரி­ய­ளவு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டக் கூடும். பொரு­ளா­தா­ரம் பாதிக்­கப்­ப­டக் கூடும்.

இன­வா­தம், மத­வா­தம் உல­கின் எந்­த­வொரு தரப்புக்கும் நன்மை ஏற்­ப­டுத்­தி­ய­தில்லை. கடும்­போக்­கு­வா­தங்­களைக் கைவிட்டு அனை­வ­ரும் சமா­தான வழி­க­ளில் சகோ­த­ரத்­து­வத்­து­டன் வாழ்­வ­தற்குக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் – – என்­றார்.

You might also like