மைத்திரி – ரணில் அரசு மீது நாமல் குற்றச்சாட்டு

அரச தலை­வர் தேர்­தற் காலத்­தில் சமூ­க­வ­லைத் தளங்­கள் ஊடா­கத் தமக்கு ஆத­ர­வான நிலைப்­பாடு கிடைத்­த­போது அத­னைத் தூக்கி வைத்­துக் கொண் ­டா­டிய அரசு, தற்­போது அவர்­க­ளுக்கு எதி­ரா­கச் சமூக­ வலைத் தளங்­கள் மாறி­ய­தும் அத­னைத் தடை செய்­வதா ?

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­தார்.
அவர் தனது கீச்­ச­கத்­தில் ஆங்­கி­லத்­தி­லும், தமி­ழி­லும் வெளி­யிட்­டுள்ள பதி­வு­க­ளி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

‘‘தமக்­குச் சாத­க­மான நிலைப் ­பாட்­டில் செயற்­ப­டும்­போது கொண்­டா­டப்­பட்ட சமூக­ வலைத் தளங்­கள், அவர்­­­­க­ளுக்கு எதி­ரான நிலைப்பாட்­.டைக் கொள்­ளும் போது தடை செய்­வதா? தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தைக் கொண்டு வந்­த­தாக அலட்­டிக் கொள்­ப­வர்­கள், வர­லாற்­றில் எந்த அர­சும் செய்­யாத அளவு பேச்­சுச் சுதந்­திரத்தை முடக்­கு கி­றார்­கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like