வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும்!!

கண்­டி­யில் கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கையைத் துரி­தப்  ப­டுத்­துமாறு சட்­டமா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரி­ய­வுக்குத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணிப்­புரை விடுத்­தார்.

ன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பான அனைத்து விசா­ர­ணை­க­ளை­யும் கூடிய விரை­வில் முடிவுக்­குக் கொண்டு வரு­மாறு பாது­காப்­புத் தரப்­பி­ன­ருக்­கும் அவர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

கண்­டி­யி­லும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளி­லும் இடம்­பெற்ற இன­ வன்­­முறைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரும், புல­னாய்­வுத் ­து­றை­யி­ன­ரும் தனித்­த­னியே விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

குற்­றச்­செ­யல்­க­ளு­டன் தொடர்­பு­டைய 230 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதில் 161 பேர் கண்டி மாவட்­டத்­தி­லும் ஏனைய 69 பேர் வெளி இடங்­க­ளி­லும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பிர­தான சூத்­தி­ர­தா­ரி­கள் எனக் கரு­தப்­ப­டும் சிலர் கொழும்­புக்கு அழைத்­து­ வ­ரப்­பட்டுத் தொடர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர்.

விசா­ர­ணை­கள் முடிவ­டைந்த பின்­னர் அவை தொடர்­பான அறிக்­கை­கள் இன்­னும் சில நாள்­க­ளில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்குக் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ளன.

சட்­டமா அதி­பர், பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோ­ரு­டன் இது சம்­பந்­த­மாகத் தலைமை அமைச்­சர் இந்த ­வா­ரம் பேச்சு நடத்­த­வுள்­ளார் என்­றும், அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் சம்­பந்­த­மாக இதன் ­போது தீவி­ர­மாக ஆரா­யப்­ப­டும் என்­றும் தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத் தக­ வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதே­வேளை, வன்­மு­றைக்கான கார­ணம் பற்­றி­யும், எதிர்­கா­லத்­தில் அத்­த­கை­ய­தொரு சம்­ப­வம் இடம்­பெறா­மல் இருப்­ப­தற்­கு­ரிய வழி­வ­கை­களை ஆராய்­­வதற்­கா­க­வும் அரச தலை­வர் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்­றும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜப்­பான் பய­ணத்தை முடித்­துக் ­கொண்டு நாடு திரும்பிய பின்­னர் உறுப்­பி­னர்­கள்  விவ­ரத்தை அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன அறிவிக்க வுள்ளார்.

You might also like