மகா­நா­யக்க தேரர்­களை அரசு மதிக்­க­வில்லை!!

மகா­நா­யக்க தேரர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளைக் கேட்­கா­மல் இந்த அரசு செயற்­ப­டு­கின்­றது. காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­வ­ரைவை நிறை­வேற்­ற­வேண்­டாம் என்று அவர்­கள் கேட்­டி­ருந்­த­போ­தும், அரசு அதனை மீறி நிறை­வேற்­றி­யுள்­ளது. இவ்­வாறு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
அரசு தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளின் ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­று­ வதே இன்­றைய நிலைக்­கான கார­ண­மா­கும். அவர்­க­ளின் ஆலோ­ச­னை­களைக் கேட்­காது, மகா­நா­யக்க தேரர்­க­ளின் ஆலோ­சனை அறி­வு­றுத்­தல்­க­ளையே கேட்­க­வேண்­டும்.

அரசு மத விழு­மி­யங்­களை உதா­சீ­னம் செய்­துள்­ளது. நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­க­ளின் போது மதத் தலை­வர்­களை பாது­காப்பு அமைச்சுக்கு அழைத்து அவர்­க­ளின் ஆலோ­சனை பெற்­றுக்­கொள்­ளும் முறைமை நான் பதவி வகித்த காலத்­தில் பின்­பற்­றப்­பட்­டது. அர­ச­மைப்­பில் மட்­டும் பௌத்த மதத்துக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தில் எவ்­வித பய­னும் கிடை­யாது –– என்­றார்.

You might also like