15ஆம் திகதி கூடுகிறது பொலிஸ் ஆணைக்குழு!!

அம்­பாறை மற்­றும் கண்டி கல­வ­ரத்­தின்­போது பொலி­ஸார் செயற்­பட்ட விதம் தொடர்­பில் விசா­ரணை நடத்­த­வுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்­குழு, அது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நாளை மறு­தி­னம் கூட­வுள்­ளது.

வன்­மு­றை­கள் வெடித்த பகு­தி­க­ளுக்கு நேரில் பய­ணம் மேற்­கொள்­ள­வுள்ள பொலிஸ் ஆணைக்­கு­ழு ­வின் அதி­கா­ரி­கள், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் கலந்­து­ரை­யாடி, சாட்­சி­யங்­க­ளைப் பதிவு செய்­ய­வுள்­ள­னர்.

அம்­பாறை மற்­றும் கண்டி வன்­மு­றை­க­ளின்­போது சட்­டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்­குப் பொலி­ஸார் தவ­றி­விட்­ட­னர் என்­றும், பக்­கச்­சார்­பான முறை­யி­லேயே அவர்­கள் நடந்து கொண்­ட­னர் என்­றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளும், முஸ்­லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­­களும் குற்­றஞ்சுமத்­தி­யுள்­ள­னர்.
மனித உரிமை அமைப்­பு­க­ளும் பொலி­ஸார் மீது விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­தி­லேயே பொலி­ஸா­ருக்கு எதி­ராக முன்­வைக் ­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பில் பொலிஸ் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளது. அதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கையே நாளை மறு­தி­னம் ஆரம்­ப­ மா­க­வுள்­ளது.

You might also like