முத்துராஜவெல குப்பை விவகாரம்: இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

முத்துரா­ஜ­வெல சர­ணா­ல­யப் பகு­தி­யில் குப்­பை­க­ளைக் கொட்­டு­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ ருந்த இடைக்­கா­லத் தடை­யுத்­த­ரவை, ஜுலை 16ஆம் திகதி வரை நீடித்து, உயர் நீதி­மன்­றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது.

கொழும்பு மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் சேக­ரிக்­கப்­ப­டும் குப்­பை­களை முத்­து­ ரா­ஜ­வெல சர­ணா­ல­யப் பகு­தி­யில் கொட்­டு­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கு­ மா­றும் கோரி, முத்­து­ரா­ஜ­ வெல சர­ணா­ல­யத்தை அண்­மித்து வசிக்­கும் 35 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளால், உயர்­நீ­தி­மன்­றத்­தில் அடிப்­படை உரி­மை­கள் மனு­வொன்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அந்த மனு, நீதி­ய­ர­சர் பிரி­ய­சாத் டெப், நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னேஹ அலு­வி­ஹார, விஜித் கே மலல்­கொட ஆகி­யோ­ர­டங்­கிய குழாம் முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, மனுவை ஜூலை 16ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­து­டன், கொழும்பு மாந­கர சபைக்­குப் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இடைக்­கா­லத் தடை­யுத்­த­ரவு நீடிக்­கப்­பட்­டது.

பிர­தி­வா­தி­க­ளின் இந்த நட­வ­டிக்­கை­யால், முத்­து­ரா­ஜ­வெல சர­ணா­ல­யத்தை அண்­மித்­துள்ள குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என­வும் மனு­தாரர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­து­டன், கம­நல அபி­வி­ருத்தி அலு­வ­ல­கத் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில், 635 ஏக்­கர் நெற்­செய்கை நில­மும் 7 ஆயி ­ரம் ஏக்­கர் சதுப்பு நிலமும் காணப்­ப­டு­வ­தாக, மனுதாரர்­க­ளால் குறிப்­பி­டப்பட்­டி ­ருந்தது.

குறித்த பகு­தி­யில் குப்­பை­கள் கொட்­டு­வ­தற்கு, பிர­தே­ச­ வா­சி­கள், சூழ­லி­ய­லா­ளர் ­கள் மற்­றும் மதத் தலை­வர்­க­ளால், கடும் எதிர்ப்­பும் தெரி­விக்­கப்­பட்டு வந்­த­து­டன், குப்­பை­கொட்­டும் நட­வ­டிக்­கை­யின் கார­ண­மாக, நீர்­கொ­ழும்பு வல­யம் மற்­றும் முத்­து­ரா­ஜ­வெல நீரேந்­துப் பகு­தி­க­ளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்­ப­டும் என்­றும் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டி­ ருந்­தது.

You might also like