பிரசன்னவுக்கும் மனைவிக்கும் எதிரான வழக்கில் சாட்சிய விசாரணை ஆரம்பம்!!

மேல் மாகாண சபை­யின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் கம்­பகா மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிர­சன்ன ரண­துங்க, அவ­ரு­டைய மனைவி உள்­பட மூவ­ருக்கு எதி­ரான வழக்­கின் சாட்­சிய விசா­ரணை கொழும்பு மேல் நீதி­மன்­றத்­தில் நேற்று ஆரம்­ப­மா­னது.

பிர­சன்ன ரண­துங்க, மேல் மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, மீதொட்­ட­முல்­லை­யி­லுள்ள 2.5 ஏக்­கர் காணி தொடர்­பில், வர்த்­த­கர் ஒரு­வ­ரி­டம் 64 மில்­லி­யன் ரூபா கப்­பம் கோரி­னார் என்று பிர­சன்ன ரண­துங்க, அவ­ரு­டைய மனைவி மயூ­ரின் ரண­துங்க, நரேஜ் பரீக் ஆகி­யோ­ருக்கு எதி­ராக, சட்­டமா அதி­ப­ரால் வழக்­குத்­தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 6ஆம் திக­திக்­கும் 2015 ஜூன் மாதம் 2ஆம் திக­திக்­கும் இடை­யி­லான காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 15 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­ட­து­டன், 65 சாட்­சி­யங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட நப­ரால் குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மைய வழக்­குத் தொட­ரப்­பட்டு, பிர­சன்­ன­வும் அவ­ரு­டைய மனை­வி­யும் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

வழக்­கின் சாட்­சிய விசா­ர­ணைக்­கான தின­மாக நேற்­றை­ய­தி­னம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், மூன்­றா­வது பிர­தி­வா­தி­யான நரேஜ் பரீக் இல்­லா­மல் சாட்­சிய விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நீதி­பதி லலித் ஏக்­க­நா­யக்க முன்­னி­லை­யில் 15 குற்­றச்­சாட்­டு ­க­ளும் வாசிக்­கப்­பட்­டன. அதன்­பின்­னர், 1ஆம் 2ஆம் பிர­தி­வா­தி­கள், தாம் நிர­ப­ரா­தி­கள் என்று அறி­வித்­த­து­டன், 3ஆவது பிர­தி­வா­தி­யின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி தமது சேவை பெறு­நர் நிர­ப­ராதி என்று அறி­வித்­தார்.

வழக்­கின் முத­லா­வது சாட்­சி­யா­ள­ரான கிரிஸ்­டி­யன் ஜெராட் மென்­டிஸ் என்­ப­வர் சாட்­சி­யம் வழங்க, முறைப்­பாட்­டா­ளர் சார்­பில் முன்­னி­லை­யான பிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் துசித் முத­லிகே சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­னார்.

இலத்­தி­ர­னி­யல் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்­யும் தொழி­லில் 1993ஆம் ஆண்டு முதல் தான் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தா­கக் கூறிய சாட்­சி­யா­ளர், 3ஆவது பிர­தி­வா­தி­யின் தொடர்­பின் அடிப்­ப­டை­யி­லேயே மீதொட்­ட­முல்லை காணியை விலைக்கு வாங்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தா­கச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

காணி­யைப் பெற்­ற­தன் பின்­னர், அதை தோண்­டி­ய­போதே அது சேற்­று­நி­லம் என்று தெரி­ய­வந்­த­தா­கக் குறிப்­பிட்ட சாட்­சி­யா­ளர், அந்­தக் காணிக்­காக பல சந்­தர்ப்­பங்­க­ளில் பணத்தை வழங்­கி­ய­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார். 1ஆம், 2ஆம் பிர­தி­வா­தி­கள் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி அனில் சில்வா முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தார். வழக்கு நாளை மறு­தி­னம் வியா­ழக்கிழமை வரை­யில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

You might also like