கிராம முகவரிகைளை கூகுளில் தேடும் வசதி!!

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பெரும்பான்மையான புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள முகவரிகளை கூகுள் மூலம் கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் தேடுபொறியில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வாய்ஸ் நேவிகேசன் (Voice Navigation) எனப்படும் குரல் மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில், தமிழ், வங்காளம், குஜராத்தி, தெலுங்கு. கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like