இலங்கை ஏதிலிக்கு இழப்பீடு செலுத்திய சுவிஸ் அரசு!!

சுவி­ஸி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட இலங்­கைத் தமிழ் ஏதி­லிக்கு சுவிஸ் அரசு பெரு­ம­ளவு இழப்­பீடு செலுத்தி இருப்­ப­தாக, அந்த நாட்­டின் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள் ளது.

நாடு கடத்­தப்­ப­டும் இலங்கை ஏதி­லி­கள் இலங்­கை­யில் கைது செய்­யப்­பட்டுத் துன்­பு­றுத் ­தப்­ப­டு­வ­தாக ஐ.நா. சபை தெரி­வித்­துள்ள போதும், அண்­மைக்­­கால­மாக இலங்­கை­யைச் சேர்ந்த தமிழ் ஏதி­லி­க­ளின் விண்­ணப்­பங் ­களைச் சுவிஸ் அரசு நிரா­க­ரித்து வரு­கி­றது.

இலங்கைத் தமிழ் ஏதி­லி­யின் விண்­ணப்­பத்­தை­ யும் சுவிஸ் அதி­கா­ரி­கள் நிரா­க­ரித்து, அவரை நாடு கடத்­தி­யுள்­ள­னர். நாடு கடத்­த­லின் பின்­னர் இலங்­கை­யில் கைது செய்­யப்­பட்டுத் துன்­பு­றுத்­தப்­பட்ட நிலை­யில், மீண்­டும் சுவிஸூக் குத் தப்­பிச் சென்று வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார்.

அவர் துன்­பு­றுத்­தப் பட்­ட­மையை உறுதி செய்த நீதி­மன்­றம், அவ­ருக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு அர­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. இதன்­படி அவ­ருக்குச் சுவிஸ் அரசு பெருந்­தொ­கை­யான இழப்­பீட்டை வழங்கி இருப்­ப­தாக அந்த ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

You might also like