சட்டத்தைப் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்துங்கள்

இலங்­கை­யில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் ஜெப்ரி பெல்ட்­மன் கண்­டித்­துள்­ளார். சட்­டத்­தின் ஆட்­சியைப் பாகு­பாடின்றி நடை­மு­றைப்­ப­டுத்­த­ வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இலங்­கைக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டுள்ள அவர், முஸ்­லிம்­க­ளின் பள்­ளி­வா­சல்­கள், வணி­க நிலை யங்களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைக் கண்­டித்து நேற்­று­முன்­­தினம் கருத்து வெளி­யிட்­டார்.
வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்ட, வெறுப்­பு­ணர்வுக் கருத்­துக்­களை வெளி­யிட்ட குற்­ற­வா­ளி­களை நீதி­யின் முன் நிறுத்­து­மா­றும், அவர் அர­சி­டம் கோரி­யுள்­ளார்.

இலங்­கை­யில் முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­கள், ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் பெல்ட்­ம­னைச் சந்­தித்தபோது, சட்­டம் ஒழுங்கு மீறப்­பட்­ட­தை­யும், முஸ்­லிம்­கள் மற்­றும் அவர்­க­ளின் வாணி­பங்­க­ளைக் குறி­வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­யும் கண்­டித்­தார் என்று ஐ.நா. அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ளது.

இது­போன்ற சம்­ப­வங்­கள் மீள நிக­ழா­மல் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அர­சின் பொறுப்பு என்­றும், சட்­டத்­தின் ஆட்­சியைப் பாகு­பாடு இன்றி நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like